Cover Image

Friday, 14 March 2014

மனதின் நிழலில்.. - நானும், நான் காணும் சமுகமும்.

என்னதான் இருந்தாலும்
பிறந்து, வளர்ந்த சூழல்
கூடவே இருந்த குடுப்பத்தினர், நண்பர்கள்
அயலவர்கள், உறவினர்கள் - என
அந்த காலப்பொழுது
இன்னும் நினைவுகளாக வந்து
உணர்வுகளில் அசைபோடுவதற்கு
மறப்பதில்லை.

பல ஆசைகள், சில தேவைகள் - அங்குமிங்கும்
என்னை பயணிக்க விட்டாலும்
என் மனம் உலா வருவதென்னமோ
தாய்நாட்டில் தான்!

தாயே! - உன்னை
சற்றுப் பிரிந்ததும் புரிந்தது என் வெறுமை. - ஆக
இருந்தது யாவும் பகட்டுப் பெருமை.

உணர்கிறேன் மீண்டும் பிறந்ததாய் - இங்கு
ஓர் அநாதையாய்!

இக்கட்டான சில தருணங்கள் என்னை தாலாட்டுது, பலவாறும் யோசனைகள் என்னை ஆட்டிப்போடுது, கடமைகளும் கண்முன்னே வந்து இடம்பிடிச்சிருக்கு, காலங்களும் நன்றாகவே சுழண்டோடுது!

இவற்றுக்கிடையில் கிடைக்கும் விதைநிலங்களும், விதைக்கும் நடுவிதைகளும் சரியாகவே பயன்படுவதாக நம்பி, பயணிக்கிறேன் - வரும் போகத்தையும்  நோக்கி! 

"நீருபிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள், சவாலான பொழுதுகளாக அமைவது அனுபவத்தை தருவதற்குத் தான்!" என்று அப்பா சொல்வதை அடிக்கடி மீட்டுகின்றேன். - அனுபவிக்கும் போது. பயில்வதற்கான வாய்ப்புகள் அமைவதை ஆரோக்கியமானதாகவே உணர்கின்றேன். இவ்வாறு ஆர்வமானதாக கல்வி / பணி சார்ந்த பயணம் (Journey through learning, and work)  எனக்கு அமைந்தாலும், நான் காணும் மக்கள், என்னைச் சூழவுள்ள சமூகம் என்னை வியக்க வைக்கின்றன. (உலகுக்கு இது பழகிப்போன கிழட்டுக் கதையாயினும், என் உணர்வுகளால் இவை அந்நியமானதாகவும், புதியதாகவும் அசாதாரண நிலையிலேயே உணரப்படுகிறது.)

"இரை தேடியுலாவும் குஞ்ஞீன்ர பறவைகள் அதிகமாகவே இருந்தும்  கூட, குஞ்சை மறந்து (மறைத்து) வாழும் பறவைகளும் வாழுதிங்கு!

தன் குடும்பத்தினர் வாழ்வதற்காக சுயநிலை மறைத்து (மறந்து) பலர் இங்கு வாழ்கிறார்கள், பெருமிதத்தோடு! - கண்டு பூரிப்படைகிறேன். 
சுய(த்)தேவைகளுக்காக குடும்பத்தினரை மறந்து (மறைத்து) சிலர் இங்கு வாழ்கிறார்கள், வெட்கம் இழந்து! - கண்டு சஞ்சலப்படுகிறேன்.

வீடெனச் சொல்ல இடமேதும்  உண்டோ?   
இடமுண்டு! மனமும் உண்டு, மணமின்றி!
வாழும் கணம் கனமாகவேயுண்டு! - ஆக
எங்குண்டு வீடு?

தொடரும் எந்தன் அலட்டல்கள், இன்னும் சில காலடிகளோடு மழலையின் சுவடாய் பலர் கேட்கும் வண்ணம் இந்த பதிவுலகில்! - மற்றுமொரு சுவடோடு வரும் வரை. 

நன்றி.
எம்.யூ. உஸாமா. 

 ---------------------------------------------------------------------.--------------------------------------------------------------------
எழுத்தில் இருப்பது.. (எழுதி முடியாது!) 
மரைக்காக வைத்த அம்பு குறிதவறியது குண்டடியில் மனம் குன்றிய தம்பி குன்றடியில் அமர்ந்ததனாலோ? - மரத்திலிருந்த வேடன் மதி தவறியது  மரையின் வேகத்தைக்கண்டோ?
கணத்திலே மரணத்தைக்கண்டது வேடனா? தம்பியா?
 ---------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...