Thursday, 21 June 2012

அரும்பு - ஒரு கன்னிப்பதிவு!


நான் எழுதும் அரும்பு வார்த்தைகள் இவை..

ஆமாம், சிறுபிள்ளை கூறும் முதல் வார்த்தை 'அம்மா' போலவும், அது எழுதும் அகரம் போலவும் இருக்கு..

நிச்சயமாக சந்தோசப்படுகிறேன், ஆனாலும் நிறைய பயப்படுகிறேன். ஏனெனில் உங்களின் நேரம் இந்த கிறுக்கல்களுடன் செலவிடப்படுகிறது, ஒரு வாசகனாய்.

என்மனதை பகிர்ந்து கொள்ள, என் புலம்பல்களுக்கு சில காதுகள் இருப்பதைப்போல ஓர் நிறைவு என்னோடு ஒட்டிக்கொள்கிறது. என்னுள்ளே உணரப்படும் உணர்வுகளின் படிமமாய் கிடக்கும் இந்த வலைப்பக்கம்...

தொடரும் எந்தன் அலட்டல்கள், இன்னும் சில காலடிகளோடு மழலையின் சுவடாய் பலர் கேட்கும் வண்ணம் இந்த பதிவுலகில்..! - மற்றுமொரு சுவடோடு வரும் வரை.

நன்றிகளுடன் உங்கள் வீட்டுப்பிள்ளை,
எம்.யூ. உஸாமா.


No comments:

Post a Comment