"யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமையால், யாழ் மாவட்டத்துக்கென விசேட வாக்குச்சாவடிகள் எதுவும் புத்தளத்தில் வைக்கப்படவில்லை." - Sonakar.Com
இது என்னை பலவாறும் சிந்திக்கத்தோன்றுகிறது.
ஏன் இவர்கள் விண்ணப்பிக்கவில்லை? இதன் பின்னணி என்னவாக இருக்கும்?
யாழ்ப்பாணத்திலாவது இவர்கள் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனரா?
இல்லையேல்
வாக்களிப்பதை வீணென கருத்துமளவுக்கு மனதளவில் வேட்பாளர்கள் மீது நம்பிக்கையிழந்துள்ளனரா?
இல்லையேல்
ஏதேனும் காரணமாக இவர்களது விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளனவா?
இல்லையேல்
மூளைச்சலவையோ, அச்சமூட்டியோ விண்ணப்பிப்பதை யாரும் தடுத்திருக்கலாமா?
ஒன்றும் இல்லையேல்
இவர்கள் எல்லோரும் தாங்கள் வாழும் மாவட்டத்துக்காக வாக்களிக்கவெனினும் விண்ணப்பித்துள்ளனரா?
ஏனெனில் இந்தச்செய்தியிலேயே 02 முல்லைத்தீவு வாக்காளர்களுக்காக பு / நுரைச்சோலை ம. வித்தியாலத்தில் வாக்குச்சாவடி நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது, யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் ஒருவர் கூட புத்தளத்தில் வாக்களிக்க கோரவில்லை என்பதை ஒருமித்து நிற்கிறது.
மூலப்பதிவு: http://www.sonakar.com/?p=58977
புதிர்களோடு நான் எம்.யூ.உஸாமா.